இலங்கையில் காணிப் பயன்பாட்டை ஒழுங்குமுறைப்படுத்தும்பொருட்டு குறித்த திணைக்களங்கள்,நிறுவனங்கள் கூட்டு அணுகுமுறையொன்றைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆகவே தேசிய, மாவட்ட, தொகுதி மற்றும் கிராமிய அடிப்படை போன்ற வேறுபட்ட நிலைகளில் காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழு அமைக்கப்பட வேண்டியுள்ளது.
கா.ப.பி.திட்டமிடல் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற வழிகாட்டலின் பிரகாரம் மாவட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழு செயற்படுகின்றது. மாவட்ட செயலாளர்,அரசாங்க அதிபர் இக்குழுவுக்குத் தலைமைவகிக்கின்ற அதேவேளையில் மாவட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் உத்தியோகத்தர் அதன் செயலாளராகச் செயலாற்றுகின்றார். குழு குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூட வேண்டும். எவ்வாறாயினும், தேவையானபோது அரசாங்க அதிபருக்கு மேலதிக குழு கூட்டத்தைக் கூட்ட முடியும்.
மிகவும் தீர்க்கமான விடயம் தொடர்பாக குழு தீர்மானம் எடுக்க நேர்கின்ற சந்தர்ப்பங்களில் அவ்விடயம் தொடர்பாக விசேடமாகக் கற்றறியும்பொருட்டு குறித்த அங்கத்தினர்களைக் கொண்ட துணைக் குழுவொன்றை அரசாங்க அதிபர் நியமிக்க முடியும்.
- மாவட்டத்தில் பயன்படுத்தப்படாமல் உள்ள காணிகளை அடையாளம் காணுதல் மற்றும் அதுபற்றி அறிவித்தல்.
- காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் துறையின் அபிவிருத்தி நடவடிக்கைகளின் முன்னுரிமையை நிர்ணயித்தல்.
- நகர மற்றும் கிராமிய பிரிவுகளின் எதிர்கால அபிவிருத்திக்கான துறைகளை அடையாளம் காணுதல்.
- காணிகளை இனம் காணுதல் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அவற்றை விடுவிப்பதற்கு பரிந்துரைகளைச் சமர்ப்பித்தல்.
- மாவட்ட அடிப்படையில் இருக்கின்ற பிரதான காணிப்பயன்பாட்டு சிக்கல்கள் தொடர்பான தகவல்களை புதிய மட்டத்திலுள்ள காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுவுக்கு அறிவித்தல்.
- தொகுதி மற்றும் கிராமிய மட்டத்தில் காணிப் பயன்பாட்டைத் திட்டமிடுவதற்கு உரிய கருத்துக்களை வழங்குதல்.
- காணிப்பயன்பாட்டு திட்டமிடலுக்காக மாவட்ட அடிப்படையில் காணிப் பயன்பாட்டு தகவல் முறைமையொன்றை ஸ்தாபித்தல்.
- காணிப் பயன்பாட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்தவதை மேற்பார்வைசெய்தல்.
- பல்வேறு நிறுவனங்களில் காணிப் பயன்பாட்டு நடவடிக்கைகளை இணைப்பாக்கம்செய்தல்.
- தொகுதி காணிப் பயன்பாட்டுத் திட்டங்கள் தொடர்பான பரிந்துரைகளைக் கலந்துரையாடி இறுதி முடிவெடுத்தல்.
- மாவட்ட செய்லாளர்,அரசாங்க அதிபர்(தலைவர்)
- பிரதேச செயலாளர்கள்
- காணிப் பயன்பாட்டு திட்டமிடல் உத்தியோகத்தர்கள் (செயலாளர்)
- மாகாண காணி ஆணையாளர்,உதவி ஆணையாளர்
- பிரதிப் பணிப்பாளர் (விவசாய விரிவாக்கம்)
- மாவட்ட காட்டு அதிகாரி
- நில அளவை அதிகாரி
- உதவி ஆணையாளர் - கமநல சேவை
- நிர்ப்பாசன பிரதிப் பணிப்பாளர்
- உதவி உள்ளூராட்சி ஆணையாளர்
- ஏற்றுமதிப் பயிர்கள் உதவிப் பணிப்பாளர்
- முகாமையாளர், சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகாரசபை
- பிரதிப் பணிப்பாளர், றபர் அபிவிருத்தி திணைக்களம்
- பிராந்திய முகாமையாளர், தெங்குப் பயிர்ச்செய்கை சபை
- உதவிப் பணிப்பாளர், மத்திய சுற்றாடல் அதிகாரசபை
தேவையான சந்தர்ப்பங்களில் ஏனைய திணைக்களங்கள்,நிறுவனங்களின் மேலதிக அங்கத்தினர்களைப் பெயர்க் குறிக்க அரசாங்க அதிபருக்கு இயலும். 2014ஆம் ஆண்டின் இலக்கு 68 மாவட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுக்களை அமைப்பதாகும். அத்துடன் அதில் 59 அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுக் கூட்டத்திற்கும் ரூ.3000 ஒதுக்கப்படுகின்றது.
தொகுதி அடிப்படையிலான காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுக்கள்
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுவின் வழிகாட்டலின் மீது தொகுதி அடிப்படையில் மாவட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுக்கள் இயங்குகின்றன. தொகுதி அடிப்படையில் குழுவின் இணைப்பாக்கத்துடன் தொகுதியில் காணிப் பயன்பாடுகளைத் திட்டமிடுகின்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறித்த தொகுதியின் பிரதேச செயலாளர் குழுவுக்குத் தலைமை வகிக்கின்ற அதேவேளையில்குழுவின் செயலாளரும் இணைப்பாக்க பணிகளை காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழு உதவியாளரும் நிறைவேற்றுகின்றனர்.
- தொகுதி அடிப்படையிலான காணிப் பயன்பாட்டு திட்டங்களைத் தயாரிப்பதற்கு மற்றும் செயற்படுத்தும் செயற்பாட்டுக்கு உதவுதல்.
- காணிப் பயன்பாட்டில் முன்னுரிமையளிக்கும் துறைகளை அடையாளம் காணுதல்.
- காணிப் பயன்பாட்டு சிக்கல்களை அடையாளம் காணுதல், பரிந்துரைகளை முன்வைத்தல் மற்றும் தேவைப்படடால் அவற்றை மாவட்ட குழுவுக்குச் சமர்ப்பித்தல்.
- குறுகிய கால மற்றும் நீண்டகால அடிப்படையில் காணிப் பயன்பாட்டு திட்டமிடல் பரிந்துரையை அடிப்படையாகக்கொண்டு செயற்பாட்டுத் திட்டமொன்றைத் தயாரித்தல். இத்திட்டத்தை தொகுதி அடிப்படையில் வருடாந்த திட்டத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- தேவைப்படும்போது தேசிய மற்றும் மாவட்ட மட்ட குழுக்களுக்கு பரிந்துரைகளை முன்வைத்தல்.
- காணிகளை ஒப்படைப்பதற்கான பரிந்துரைகளைச் சமர்ப்பித்தல்.
- காணிகளைச் சுவீகரிப்பதற்கான பரிந்துரைகளைச் சமர்ப்பித்தல்.
- கிராம மட்டத்தில் காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் குழுக்களுக்கு அறிவுறுத்தல்களையும் வழிகாட்டல்களையும் வழங்குதல்.
- எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக தொகுதியிலுள்ள காணிகளை அடையாளம் காணுதல்.
- காணிகளின் தகுதியை அடிப்படையாகக்கொண்டு பல்வேறு பணிகளுக்கு காணிகளை ஒதுக்குவதற்காகப் பரிந்துரைகளைச் சமர்ப்பித்தல் தொகுதி அடிப்படையில் காணித் தரவு முறைமைகளை ஸ்தாபித்தல் மற்றும் மாவட்ட தரவுகள் முறைமையுடன் இணைத்தல்.
- காணிப் பயன்பாட்டு திட்டமிடல் உதவியாளர். (செயலாளர்)
- காணி உத்தியோகத்தர், குடியேற்றத் திட்ட உத்தியோகத்தர்.
- விவசாய ஆலோசகர்.
- பிரதேச செயலக உத்தியோகத்தர் - கமநல சேவை.
- வீச்சிடைக் காட்டு உத்தியோகத்தர்.
- உதவி நில அளவை அதிகாரி.
- விரிவாக்க உத்தியோகத்தர்.
- கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர்.
- சூழல் உத்தியோகத்தர்.
- கமநல அமைப்பு பிரதிநிதிகள்.
- பெருந்தோட்டத்துறை பிரதிநிதிகள்.
- சம்பந்தப்பட்ட அரச சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள்.
ஒவ்வொரு குழு கூட்டத்திற்கும் உணவு பானங்களுக்கு ரூ.1500/- நிதி ஒதுக்கப்பட்டது. ஒருசில மாவட்டங்களில் இக் கூட்டங்கள் தொகுதி விவசாய குழு கூட்டங்களுடன் சேர்த்து நடத்தப்பட்டன. ஆகவே ஒதுக்கப்பட்ட மொத்தப் பணமும் பயன்படுத்தப்படவில்லை.