- மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் அலுவலகங்களூடாக சேகரிக்கப்படும் பயன்படுத்தப்படாத காணிகள் மற்றும் குறைந்த பயன்பாட்டிலுள்ள காணிகள் உள்ளடங்கலாக நாட்டின் சகல இடஞ்சார்ந்த தரவுகளையும் மையப்படுத்தி இற்றைப்படுத்தப்பட்ட காணித் தகவல் முறைமையை பாராமரிப்பது இத் திணைக்களத்தின் புவியியல் தகவல் முறைமை பிரிவாகும்.
- இப் பிரிவினால் மாவட்ட உத்தியோகத்தர்களுக்கு புவியியல் தகவல் முறைமை (ஜி.ஐ.எஸ்) இனை பயன்படுத்தி இடஞ்சார்ந்த தரவுகளை கையாளுவதற்கு தேவையான தொழில்நுட்ப வழிகாட்டல் வழங்கப்படுகிறது.
- காணிப்பயன்பாட்டை இற்றைப்படுத்தும் செயற்பாட்டை எளிதாக்க மாவட்டங்களுக்கு தேவையான அடிப்படை வரைபடங்கள் வழங்கப்பட்டது.
- தேவையான போது புவியியல் தகவல் முறைமை தொடர்பான மென்பொருள் பற்றி மாவட்ட மற்றும் பிரதேச உத்தியோகத்தர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தத் தேவையான பயிற்சி வழங்குவது இப்பிரிவின் செயற்பாடாகும்.